சட்டப்பேரவையில் பேசும் உறுப்பினர்கள் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் பேசக் கூடாது என அவை முன்னவர் துரைமுருகன்அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்.
தாம் அரை நூற்றாண்டாக அவையில் இருக்கும் நிலையில், அவையின் கண்ணியம் , கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவது வருத்தம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சபாநாயகரை மாண்புமிகு பேரவைத் தலைவர் என்று மட்டுமே அனைவரும் அழைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.